திட்டக்குடியில் 1000 விதவைப் பெண்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும், துணை முதலமைச்சர் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் முன்பே அறிவித்திருந்தார்.
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
அதன்பேரில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சி.வெ. கணேசன், ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், ஹூண்டாய் மோட்டார் நிர்வாக இயக்குனர் ஜியோங்கிக் லீ, வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் சேர்மேன் சி.வெ.க. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்குத் தையல் இயந்திரங்களை வழங்கினர்.
அமைச்சர் சி.வெ. கணேசன் உரை :
இத்தொகுதியில் மொத்தம் சுமார் 8,000 விதவைப் பெண்கள் உள்ளனர். இதுவரை 3,000 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் 2,000 தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
கலந்து கொண்டவர்கள் :
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், சின்னசாமி, திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, முன்னாள் மங்களூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுகுணா சங்கர், திட்டக்குடி நகர மன்ற தலைவர் நிலா கோதண்டம், கிளைச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments
Thank you for your comments