தேவரியம்பாக்கத்தில் தூய்மையே சேவை நிகழ்ச்சி - ஆட்சியர் தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம்,செப்.17:
ஆண்டு தோறும் செப்.17 ஆம் தேதி முதல் வரும் அக்.2 ஆம் தேதி வரை தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாளும் பொது இடங்களை சுத்தம் செய்தல், பேரணிகள் நடத்துதல், உறுதிமொழிகள் வாசித்தல், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தூய்மையே சேவை நிகழ்வை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் விழிப்புணர்வு பதாகை ஒன்றில் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார்.
தூய்மையே சேவை உறுதி மொழியை ஆட்சியர் வாசிக்க பின்னர் அனைவரும் அதை வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் இதற்கென அமைக்கப்பட்டிருந்த செல்பி மையத்தையும் திறந்து வைத்தார். மரக்கன்றுகளையும் நட்டார். தொடர்ந்து தூய்மைப்பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களை கௌரவித்ததுடன் தூய்மைப்பணி செய்ய பயன்படும் உபகரணங்களையும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
விழாவில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ,மாணவியர், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments