முதலமைச்சர் கோப்பைக்கான கோகோ விளையாட்டுப் போட்டியில் கோவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வீரர்கள் முதலிடம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கோகோ விளையாட்டுப் போட்டியில் கோவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வீரர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இவ்வீரர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் திறமையாக விளையாடி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த வீரர்களுக்கு தமிழ்நாடு கோகோ அசோசியேஷன் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விதமான பயிற்சிகளும் மற்றும் தேவையான உதவிகளும் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments