தாஜ் விவான்டாவில் மின்னும் நேரம் ஃபேஷனிஸ்ட் விற்பனை கண்காட்சி...!
செ 13 ந்தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காட்டன் ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், அணிகலன்கள்,நகைகள்,விற்பனைக்கான, ஐம்பதற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஃபேஷன்ஸ்டா ஷாப்பிங் கண்காட்சி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சிறப்பு விற்பனை கண்காட்சியாக கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் விவாண்டாவில் தமது விற்பனை கண்காட்சியை துவங்கியது.
செப் 13,14, ந் தேதி வரை இரன்டு நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,வீட்டு அலங்கார பொருட்கள் என 50க்கும மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ள்ளன குறிப்பாக அனைத்து சீசன்களுக்கான பல்வேறு விதமான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக,ஃபேஷன்ஸ்டா கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் ரிங்கி ஷா தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில், ஆலம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் மீனா ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார்.
இந்த ஆண்டு பல்வேறு சீசன்களில் சிறப்பு விற்பனை கண்காட்சி நடைபெற்ற நிலையில், ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப் பட்டுள்ளதாகவும், குறிப்பாக கண்காட்சியில், பெண்களுக்கான லேட்டஸ்ட் மாடல் ஆடைகள், கொல்கத்தா, லூதியானா, குஜராத், டில்லி, ஜெய்ப்பூர், புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக விற்பனை செய்யபடுவதாக தெரிவித்தார்
🌸🔥 விபூதி யோகம் – வாழ்வை மாற்றும் தெய்வீக ரகசியம் 🙏 #astrology
இந்நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளர் காவ்யா விஜய்,அஞ்சலி சௌத்ரி இந்தியா INC, பிரியா கிரிஷ் மிஸ்ஸஸ் கோவை,பூஜா பையா ஆஷ்டெக் இயந்திரம் இயக்குனர்.
கோமதி சிவகுமார் தொழிலதிபர், ஸ்வேதா கோவிந்த் ஜி எஸ் பர்னிசிங்,ஆர்ஜே மரியா ரேடியோ சிட்டி , பிரதீபா பட்டாபிராமன் ஆதித்யா வென்ச்சர்ஸ், திவ்யா கிருபாகர்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



No comments
Thank you for your comments