Breaking News

காஞ்சிபுரம் அன்னை இந்திரா நகர் ரயில்வே கீழ் பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு – எம்.பி கா. செல்வம் உறுதி

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகிலுள்ள அன்னை இந்திரா நகர் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரயில்வே கீழ் பாலம் திறப்பு தொடர்பாக,  காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர்  கா. செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.


அங்கு அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் திரு. கதிரவன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து மனுவை வழங்கினர். 



இதனைப் பெற்ற எம்.பி கா. செல்வம் அவர்கள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த இந்திரா நகர் – காமராஜர் நகர் இடையேயான ரயில்வே தண்டவாளத்தின் கீழ் உள்ள பாலத்தை சீரமைத்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் கா. செல்வம் அவர்களை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments