ஹெலன் ஓ கிரேடி சர்வதேச மழலையர் பள்ளி பிரமாண்ட திறப்பு விழா...,!
கோவை மாவட்டம் செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் ஹெலன் ஓ' கிரேடி சர்வதேச மழலையர் பள்ளி பிரமாண்ட திறப்பு விழா நடைபெற்றது.
இதில் தலைமை விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி கொறாடாவுமான எஸ்.பி. வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். ஹெலன் ஓ'கிரேடி சர்வதேச மழலையர் பள்ளியின் இயக்குநர்கள் நிவாஸ் மற்றும் இனாஸ் அனைவரையும் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஆர்எம்சிஹெச் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர். செந்தில் குமார், டாக்டர். ரூப, கோயம்புத்தூர் நகைக்கடைத் தலைவர் முத்து வெங்கட்ராமன்,உடுமலைப்பேட்டை பாரதி பள்ளியின் இயக்குனர், பிரமுகர்கள் பள்ளியின் மேலாண்மை முதன்மை ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments