Breaking News

சேவையும் கொண்டாட்டமும் நம்ம மோடி நம்ம கொண்டாடுவோம்

கோவை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்டம்  சார்பில்   பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெற  இருக்கின்ற சேவையும்  கொண்டாட்டமும் என்ற தலைப்பில் மாபெரும் இசைத்திருவிழா பிருந்தாவன் கல்வி  அறக்கட்டளை சார்பில் மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் வசந்தராஜன் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இது குறித்து  பத்திரிகையாளர் சந்திப்பு  போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் பள்ளி அருகில்  மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர்  வசந்த ராஜன்  தலைமையில்  கோவை தெற்கு மாவட்ட தலைவர் ஆர் சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்றது.




இது குறித்து வசந்தராஜன் கூறியதாவது பாரத பிரதமர் நரேந்திர மோடி 75-வது பிறந்தநாள் விழாவை உலக முழுவதும் 2 வாரங்கள் இரத்ததான முகாம், ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு மாவட்டம் சார்பில் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் பள்ளி அருகில் சேவையும் கொண்டாட்டமும் நம்ம மோடி நம்ம கொண்டாடுவோம்  துவக்க விழாவில்  ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியும் மன அழுத்தத்தால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மேலும் பாரத பிரதமர் மோடி மீது அன்பு கொண்ட அனைத்து பெரியவர்கள் தாய்மார்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பாரத பிரதமர் மோடி அவர்களை வாழ்த்து மாறு கேட்டுக் கொண்டார்.இதில் ஆர். எஸ்.புரம் மண்டல் தலைவர் பிரேம் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.‌‌

No comments

Thank you for your comments