பல்வேறு கட்சியிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்
📍 விருத்தாச்சலம் – 23.09.2025
கடலூர் மைய மாவட்டம், விருத்தாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்ற நிகழ்வில், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தங்களை விடுதலை சிறுத்தைகளாய் மாவட்ட செயலாளர் பி.ஆர். நீதிவள்ளல் தலைமையில் இணைந்தனர்.
புதிய உறுப்பினர்களுக்கு கட்சி சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தியதுடன், பி.ஆர். நீதிவள்ளல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அவரது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்வில் மண்டல செயலாளர் ஐயாயிரம், நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, ஒன்றிய பொருளாளர் எழில்வான்சிறப்பு, ஸ்டுடியோ சக்திவேல், ஒன்றிய துணை செயலாளர் தென்றல், சரவணன், கவியரசன், மாவட்ட அமைப்பாளர் தன்ராஜ்,
விஜயகுமார், நகர துணை செயலாளர் வயலூர் இளங்கோவன், வீரமணி, நகர பொருளாளர் தோட்டா தனசேகர், துரைமுருகன், பாபுஜி, அருள்சுகன், தேவா, செல்வகுமார், விமல்ராஜ், ராஜ், ஓட்டுனர் பாலு, மணலூர் சங்கர், பழனிச்சாமி, அகத்தியன் பாலா, வீரதமிழன், மேட்டு காலனி கர்ணன், சதீஷ், மதுசூதனன், மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
🎙️ பேட்டி: பி.ஆர். நீதிவள்ளல் – மாவட்ட செயலாளர், கடலூர் மையம்
No comments
Thank you for your comments