Breaking News

பாரத சேவா ஆசிரமம் சார்பில் தன்னார்வலருக்கு பாராட்டு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா...

கோவை ஆர்எஸ்புரம் மாதேஸ்வரன் கோவில் அருகில் பாரத சேவா ஆசிரமம் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தாமோதர்தாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.



 அதனைத்தொடர்ந்து மத்திய அரசின் நலத்திட்டங்களை ஏழை மக்களுக்கு பயனளிக்கும் சேவையில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை ஆதரிக்கும் வகையில் சால்வை மற்றும் துளசி மாலை அணிவித்து கெளரவிக்கும் நிகழ்ச்சி தேனி. ச.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரளிக்களம் கிருஷ்ணதாஸ், பிளாச்சிமடா ஹரிஹரசுதன், தச்சம் குன்னு சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து தன்னார்வலர் தேனி.ச. கண்ணனை சால்வை துளசி மாலை அணிவித்து கெளரவித்தனர். பின்னர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பாரத சேவா ஆசிரமம் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் சமூகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments