காஞ்சிபுரத்தில் சிறந்த கூட்டுறவு வங்கிகளுக்கு விருது வழங்கும் விழா - மேலாண்மை இயக்குநர் வழங்கினார்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 111 வது பொதுப்பேரவைக் கூட்டம் அவ்வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் தலைமையில் நடைபெற்றது.காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளர் பா.ஜெயஸ்ரீ,செங்கல்பட்டு மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் வே.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் அ.வெங்கட்ரமணன் வரவேற்று பேசினார்.பொதுமேலாளர் த.ஸ்ரீனிவாசன் ஆண்டறிக்கை வாசித்தார்.
நிறைவாக காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் தா.பலராமன் நன்றி கூறினார்.
பொதுப்பேரவைக் கூட்டத்தில் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த வங்கி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் பொதுப்பேரவையில் வைத்து அங்கீகரிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments