காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாள் விழா-அண்ணா நினைவு இல்லத்தில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி
காஞ்சிபுரம்,செப்.15:
திமுக சார்பில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், எம்பி,எம்எல்ஏக்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத்.பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,ஜெயலலிதா பேரவையின் மாவட்ட செயலாளர் கே.யு.சோமசுந்தரம், நகர் தலைவர் பாலாஜி ஆகியோர் உட்பட அக்கட்சி நிர்வாகிகள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மதிமுகவில் துணைப்பொதுச்செயலாளராக இருந்து அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் தனது ஆதரவாளர்களான புலவர் செவந்தியப்பன்,வளையாபதி,தூணை பார்த்தீபன்,ராமேசுவரம் கராத்தே பழனிச்சாமி மற்றும் பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஓபிஎஸ் அணியின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் அவரது ஆதரவாளர்களான மாவட்ட பொருளாளர் வஜ்ஜிரவேலு, அமைப்பு செயலாளர் பெருநகர் கே.கோபால் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.
No comments
Thank you for your comments