காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா – ஓபிஎஸ் அணியினர் மரியாதை | Anna 117th Birth Anniversary Celebration Kanchipuram AIADMK OPS Wing
காஞ்சிபுரம் :
இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சி. என். அண்ணாதுரை தெருவில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவு இல்லத்தில், அ.தி.மு.க. ஓபிஎஸ் அணி உரிமை மீட்பு குழு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும் ஆன்மீக அன்பருமான முத்தியால்பேட்டை ஆர்.வீ. இரஞ்சித்குமார், காலை 9.30 மணியளவில் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு பிரமாண்டமான மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.
பின்னர், அண்ணாவின் இல்லம் அருகே கூடியிருந்த பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி விழாவில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் கே. கோபால், ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் எ.வஜ்ரவேலு, சரத்குமார், ஷகிலா, வேலு, ஷாலினி வேலு, ஒன்றிய செயலாளர் மாலிக் பாஷா, முனிரத்தினம், டபிள்யு.கே. சரவணன், வெங்கடேசன், மோகன், கோவிந்தராஜ், சூர்யா, காமாட்சி கான், பேரூராட்சி செயலாளர் குலசேகரன், படப்பை பாபு, ரவிக்குமார், மாவட்ட அணி செயலாளர் பூக்கடை ஜகா, ஜெயபிரகாஷ், சந்திரசேகர், பிரபு, மகேஷ், புண்ணியகோட்டி, விஜய், சீனிவாசன், சதீஷ், விமல், சக்திவேல் உள்ளிட்டோர், மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments