Breaking News

நன்றி மறந்தவர் எடப்பாடி கே.பழனிசாமி - காஞ்சிபுரத்தில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு


காஞ்சிபுரம்,செப்.22:

தனக்கு உதவி செய்தவர்களையே கட்சியை வீட்டு நீக்கி நன்றி மறந்தவர் எடப்பாடி கே.பழனிசாமி என காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்,ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்புக் கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சி மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன்,கழக கொள்கை பரப்பு செயலாளரும், எம்எல்ஏவுமான எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட். ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, எம்.பி.க.செல்வம்,கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்கள். இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது

கடந்த நான்கரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் திமுக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. 

ஓரணியில் தமிழ்நாடு என்று முதலமைச்சர் அறிவித்தவுடன் சுமார் ஒரு கோடி வீடுகளுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களது மனநிலையை அறிந்திருக்கிறோம்.

இதுவரை 2 கோடியே 7 லட்சம் உறுப்பினர்களை திமுகவில் இணைத்திருக்கிறோம்.

ஆனால் பாஜகவோ உறுப்பினர் சேர்க்கையை இணையம் வாயிலாக மட்டுமே சேர்த்தது. அதிலும் நம்முடைய தலைமை நிலைய செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை சேர்த்திருக்கிறது.இது தான் பாஜகவின் செயல்பாடு.

திமுகவைப் போல எந்த ஒரு அரசியல் கட்சியும் உறுப்பினர் சேர்க்கையை செய்ததில்லை.அண்ணா,கருணாநிதி காலங்களில் செய்யாத பல சாதனைகளை மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார்.

பெண்கள் தான் நன்றி உணர்வோடு இருப்பார்கள் என்பதற்காக பெண்களுக்குத்தான் அதிகம் செய்திருக்கிறார்.சசிகலா எடப்பாடியை முதல்வராக்கினார். ஆனால் எடப்பாடி சசிகலாவை கட்சியை வீட்டு நீக்கினார்.

கடந்த 1977 இல் நடந்த கொலை வழக்கு ஒன்றிலிருந்து எடப்பாடியை செங்கோட்டையன் தான் வழக்கிலிருந்து வெளிவர உதவினார்.அனால் இப்போது அவரையும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் எடப்பாடி கே.பழனிசாமி. 

யார்,யார் உதவி செய்தார்களோ அவர்களையெல்லாம் கட்சியை வீட்டு நீக்குவது தான்,நன்றி மறப்பது தான் எடப்பாடியின் குணம்.இதை அதிமுகவினர் மறந்து விடக்கூடாது என்றும் பேசினார்.நிறைவாக பகுதி செயலாளர் கே.திலகர் நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments