சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் 30 லட்சம் மதிப்பீட்டில் அரசு சுகாதார வளாகத்தில் கூடுதல் கட்டிடம்...!
கோவை மாவட்டம் தொழில்நுட்ப துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் கோவை சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆண்டு தோறும் பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து வருகிறது இந்நிலையில் அதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு கோயம்புத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20, மற்றும் கோயம்புத்தூர் நார்த் லேடிஸ் சர்க்கிள் 11, ஆகிய அமைப்புடன் இணைந்து பொதுமக்கள் பயனடையும் வகையில் 30 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளலூர் பகுதியில் கூடுதல் மருத்துவஅறை, மருந்துகள் வழங்கும் அறை, நவீன ஆய்வகம், நோயாளிகள் காத்திருப்பு அறை, உள்ளிட்ட கட்டடங்களை கட்டி அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தந்துள்ளது .
இதன் திறப்பு விழாவில் கோவை சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சரவண குமார் ரிப்பன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார மேற்பார்வையாளர் பாலுசாமி, மெடிக்கல் அதிகாரி பிரதீபா, ராகுல் கிருஷ்ண கோபால், அருண் குணசேகரன், நிக்கிதா ராகுல், சிவகாமி அருண் நாகப்பன் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments