காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ.2.52 லட்சம் நிதியுதவி -ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம், செப்.29:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழாண்டில் 12 ஆம் வகுப்பு முடிந்து உயர்கல்வியில் சேராமல் இருந்த 14 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அவர்கள் விரும்பிய உயர்கல்வியை தொடர்ந்து படிப்பதற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உயர்கல்வியில் சேர்ந்து படிப்பதற்காக மனு அளித்த 14 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அவர்கள் விரும்பிய கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தேவையான முழுக்கல்வி கட்டண தொகையையும் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
கல்விக் கட்டணத் தொகை ரூ.2,52,505க்கான காசோலையினை அந்தந்த கல்வி நிறுவனங்களின் பெயரிலேயே வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு)நளினி,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments