Breaking News

காரி மோட்டார் ஸ்பீட்வேயில் ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025...!



கோவை  போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்ற ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025-ன் 2வது சுற்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது 



புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை, ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை மற்றும் ஜேகே டயர் நோவிஸ் கோப்பை என பல்வேறு பிரிவுகளில்  நடைபெற்ற போட்டியில்  இந்தியா முழுவதும் உள்ள கார் மற்றும் மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வமுள்ள வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.



ந்த ஆண்டு ஜேகே டயரின் பந்தய நாட்காட்டியில் அறிமுகப்படுத் தப்பட்ட லெவிடாஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் கோவையை சேர்ந்த ஜெய் பிரசாந்த் வெங்கட், மாருதி இக்னிஸ் மாடல் காரை தன்னால் தன்னம் பிக்கையுடன் கையாள முடியும் என்பதை வெளிப்படுத்தினார், 

இப்போட்டியில் ஜெய் பிரசாந்த் 10 சுற்றுகளாக நடந்த 2.3 கிமீ தூரத்தை 14:38,492 நேரத்தில் கடந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இந்நிகழ்வில் கார்பந்தய வீரர்கள், மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்கள், ரேஸ் பிரியர்கள்,பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டு ரேசைக்கண்டு மகிழ்ந்தனர். 

📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455




No comments

Thank you for your comments