Breaking News

கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் – கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க கோரி போராட்டம், போக்குவரத்து பாதிப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ் சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள், கல்லூரி நிறுத்தத்தில் குறைவான அரசு பேருந்துகள் நிற்கும் பிரச்சினையால் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.


அதனைத் தொடர்ந்து, “விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் கல்லூரி நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும்; 

மேலும் கல்லூரி நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்” எனக் கோரி மாணவர்கள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து உரிய அதிகாரிகளிடம் பேசுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர்.

No comments

Thank you for your comments