Breaking News

குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள்-காஞ்சிபுரம் ஆட்சியர் வழங்கினார்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2 ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 பேருக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பணி நியமன ஆணைகள் வழங்கினார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) க.ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற 336 கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக பரிசீலித்து தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2 ஏ தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற 6 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் ஆட்சியர் வழங்கினார்.

முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி தொடக்க விழாவில் மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பலரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments