திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டே உயிரிழந்த பெண்
மாமல்லபுரம் :
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல மெடிக்கல் கடை உரிமையாளர் ஞானம் அவர்களின் மனைவி ஜீவா, மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
திருமண நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கு இருந்தவர்கள் உடனடியாக முதலுதவி அளித்தும், நிலைமை மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பாதியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் திருமண நிகழ்ச்சியில் சோகத்தை ஏற்படுத்தியதோடு, அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments