கல்விப்பணி, சமயப்பணிகளில் சிறந்து விளங்கியவர் திருப்பனந்தாள் காசி மட அதிபர் - காஞ்சி சங்கராசாரியார் புகழாரம்
காஞ்சிபுரம், ஆக.20:
இது தொடர்பாக காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவமி தம்பிரான் சுவாமிகள்(95) செவ்வாய்க்கிழமை சித்தி அடைந்துள்ளார்.
அவர் சித்தி அடைந்த செய்தியை கேட்டறிந்த காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கல்விப்பணியிலும், சமயப்பணியிலும் சிறந்து விளங்கியவர் என்று நினைவு கூர்ந்தார்.
காஞ்சி சங்கர மடத்திற்கும்,திருப்பனந்தாள் காசி மடத்திற்கும் இன்று வரை நெருங்கிய தொடர்பு உண்டு.சித்தியடைந்த காசி மட பீடாதிபதியின் 90 வது ஜெயந்தி விழாவில் பங்கேற்றது, காஞ்சி சங்கராசாரியார்கள் செய்த வியாச பூஜைக்கு கங்கை நீர் காசி மடத்து அதிபர் அனுப்பி வைக்கும் வழக்கம் இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் சித்தியடைந்த காசி அதிபர் காஞ்சி காமாட்சி அம்மனின் பக்தர்.வடநாட்டையும், தென் நாட்டையும் இணைக்கும் கலாச்சாராமாக விளங்கி சிறந்த கல்விப்பணிகள், சமயப்பணிகளை ஆற்றியவர் என்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவு கூர்ந்ததாக அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments