ஓராண்டில் 10 மாவட்டங்களில் 7481 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் - வடக்கு மண்டல ஐஜி தகவல்
காஞ்சிபுரம், ஆகஸ்ட் 20:
செய்தி குறிப்பு :
வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் மதுவிலக்கு சார்ந்த குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கடந்த 1 7 2025 முதல் 31/7/2025 வரை மொத்தம் 3 ஆயிரத்து 821 நபர்கள் மீது நன்னடத்தைக் காண பிணைய பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களிலும் 1492 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி பிணையில் விடக்கூடாத குற்றங்களாக மாற்றி அமைக்கப்பட்டதன் விளைவாக 7,481 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சம் கிலோ வெல்லம் கைப்பற்றப்பட்டது கள்ளச்சாராய குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன 10 மாவட்டங்களிலும் 12949 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அது தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது
வடக்கு மண்டலத்தில் கடந்த ஓராண்டில் 10 மாவட்டங்களில் கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகள் உட்பட பல்வேறு வழக்குகளில் 14 ஆயிரத்து 900 மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
20,011லிட்டர் கள்ளச்சாராயம் 67,748 ஊழல் 288 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது குற்ற வழக்குகள் தொடர்புடைய 123 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
கடந்த ஓராண்டில் மொத்தமாக 14 ஆயிரத்து 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதுடன் 5570 பேர் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன அசையும் அசையா சொத்துக்களை முடக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
கடந்த ஓராண்டு காலத்தில் மதுவிலக்கு தொடர்பான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இது தொடரும் எனவும் அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SEO Description: In the last one year, 7,481 people were jailed under the Tamil Nadu Prohibition Act in 10 northern districts. Over 14,900 cases were registered, with large-scale seizures of illicit liquor and materials, according to IG Asra Garg.
No comments
Thank you for your comments