Breaking News

விநாயகருக்கான சலங்கை பூஜை மற்றும் நாட்டியாஞ்சலி விழா களைகட்டியது






விருதாச்சலம் :

இவ்வாண்டு, கோயில் செயல் அலுவலர் மாலா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சலங்கை பூஜை மற்றும் நாட்டியாஞ்சலி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நடன நிகழ்ச்சியில் குரு பாபு – குரு வகிதா பானு தலைமையில் 26 மாணவிகள் பரதநாட்டியத்தை ஆடினர்.

சிறப்பு விருந்தினர்களாக துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனும், விருதாச்சலம் நகர்மன்றத் தலைவி டாக்டர் சங்கவி முருகதாஸும் கலந்து கொண்டு பாராட்டினர்.


உலகம் முழுவதும் பெரும்பாலும் சிவனுக்கு மட்டுமே நாட்டியாஞ்சலி அர்ப்பணிக்கப்படும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக மாஸ்டர் அகாடமி மாணவிகள் விருதாச்சலத்தில் விநாயகருக்கே நாட்டியாஞ்சலி செய்து வருவது தனிச்சிறப்பாகும்.

நிகழ்வில், புதிதாக நடனம் கற்ற மாணவிகளுக்கு ஆடல் வல்லான் சன்னதியில் சலங்கை பூஜை நடத்தப்பட்டது. மாணவிகள் "மூசிஷ வாகனா" என்ற விநாயகர் பாடலுக்கும், "சண்முக கவத்துவம்" முருகன் பாடலுக்கும் நடனமாடினர்.

மேலும், "ஒன்பது கோளும்" என்ற பாடலுக்கு புதுமையான நடன வடிவமைப்பு பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. "தோடுடைய செவியன்" மற்றும் "விருத்தாம்பிகை" கீர்த்தனைகளும் மனம் உருகச் செய்தன.

மாணவிகளுக்கு பயிற்சி அளித்த குரு பாபுவும் குரு வகிதா பானுவும் சிறப்பு விருந்தினர்களால் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ரசித்தனர்.

English Short News:

At the famous Viruthagireeswarar Temple in Virudhachalam, Cuddalore district, the Vinayagar Chaturthi Natyanjali Festival was celebrated grandly under the guidance of temple officer Mala. The event, organized by Master Academy, featured Salangai Poojai and Bharatanatyam performances by 26 students led by Guru Babu and Guru Vagitha Bhanu. Over 1,000 devotees witnessed the performances, which included innovative choreography such as the dance for “Onbathu Kolum.” Special guests Deputy Superintendent of Police Balakrishnan and Municipal Chairperson Dr. Sangavi Murugadas felicitated the students and gurus.

No comments

Thank you for your comments