ராஷ்ட்ரீய ஸநாதன சேவா சங்கம் மற்றும் அகில பாரத மக்கள் கட்சி இணைந்து விநாயகர் சதுர்த்தி விழா...!
இவ்விழாவில் காலையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா மற்றும் கணபதி ஹோமம் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் விநாயகரை அபிஷேகம் செய்து தரிசிக்கும் வகையில் சிறிய வடிவிலான ஐம்பொன் விநாயகர் சிலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் சேகர் முன்னிலை வகித்தார்.இதில் மாவட்டத் துணைத் தலைவர் நாராயணசாமி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் அஜய் பிரபு இளைஞர் அணி தலைவர் சதீஷ் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மகேஷ் மோகன் வினோத் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்து அருள் பெற்றனர்.
No comments
Thank you for your comments