வாரணவாசியில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் திறப்பு
காஞ்சிபுரம்,ஆக.27:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசியில் ரூ.30லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நவீன உட்கட்டமைப்பு வசதிகளோடு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டிருந்தது.
இந்த அலுவலக திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.எம்பி க.செல்வம் முன்னிலை வகித்தார்.
உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.பின்னர் திறப்பு விழா கல்வெட்டையும் திறந்து வைத்து அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
புதிய ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயில் கதவில் தமிழக அரசு முத்திரை, தமிழ் வாழ்க எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கதவுகளாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
விழாவில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் ஆர்.கே.தேவேந்திரன்,துணைத்தலைவர் பி.சேகர் ஆகியோர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments