Breaking News

மங்கலம்பேட்டையில் 33 விநாயகர் சிலைகள் ஊர்வலம் – - 600 போலீசார் பாதுகாப்பு

விருத்தாச்சலம் :

நாடெங்கிலும், கடந்த 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்துள்ள மங்கலம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிப்பட்டு வந்தனர். 


இவ்வாறு வழிப்பட்ட விநாயகர் சிலைகளை, 5வது நாளன்று மங்கலம்பேட்டையில்  ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி, இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. 



மங்கலம்பேட்டை ஓட்டைப் பிள்ளையார் என்கிற ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை, இந்து முன்னணி தமிழ்நாடு மாநில செயலாளரும், புதுவை மாநிலத் தலைவருமான சனில்குமார் தலைமைத் தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இதற்கு, கடலூர் வேல்முருகன், இந்து முன்னணி விருத்தாசலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்  கமலக்கண்ணன், மங்கலம்பேட்டை பேரூர் தலைவர் மணிகண்டன், பாஜக பிரச்சார பிரிவு மாநிலச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஊர்வலத்தில் மங்கலம்பேட்டை, ரூபநாராயணநல்லூர், பள்ளிப்பட்டு, கோ.பூவனூர், புல்லூர், மு.அகரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து எடுத்து வரப்பட்ட 33 விநாயகர் சிலைகள் மங்கலம்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர், மாலையில், மங்கலம்பேட்டை மற்றும் அருகிலுள்ள ரூபநாராயணநல்லூர் ஆகிய ஏரிகளில் கரைக்கப்பட்டன.

இந்த ஊர்வலத்தில், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், கோவிலானூர் மணிகண்டன், இந்து முன்னணி மங்கலம்பேட்டை பேரூர் செயலாளர் தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் மேற்பார்வையில், விருத்தாசலம், திட்டக்குடி, சேத்தியாதோப்பு நெய்வேலி, சிதம்பரம், பண்ருட்டி மற்றும் கடலூர் உள்ளிட்ட 7 காவல் துணை கண்காணிப்பாளர்கள், விருத்தாசலம் அனைத்து மகளிர், மங்கலம்பேட்டை, பெண்ணாடம் என 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள், 100 அதிவிரைவுப் படையினர், 100 ஊர்க்காவல் படையினர், 150 உள்ளூர் போலீசார் என 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


For English Reading :

Virudhachalam: 33 Vinayaka idols immersed amid tight security in Mangalampettai

The Vinayaka Chaturthi festival began across the country on the 27th of this month. In Cuddalore district, residents of Mangalampettai and nearby villages installed Vinayaka idols in homes and public places for worship. On the fifth day, it is customary to take these idols in a grand procession for immersion.

Accordingly, a Vinayaka idol procession was organized in Mangalampettai by Hindu Munnani. The rally commenced from the Ootai Pillaiyar Sri Varasithi Vinayakar Temple, flagged off by Sanil Kumar, Tamil Nadu State Secretary and Puducherry State President of Hindu Munnani.

Key participants included Cuddalore Velmurugan, Hindu Munnani Virudhachalam Union Coordinator Kamalakannan, Mangalampettai Perur President Manikandan, and BJP State Secretary (Campaign Wing) Rajendran.

A total of 33 Vinayaka idols from villages including Mangalampettai, Rupanarayanallur, Pallipattu, Ko.Puvanoor, Pullur, and Mu.Agaram were paraded through the main streets of Mangalampettai. Later in the evening, the idols were immersed in lakes at Mangalampettai and Rupanarayanallur.

Several leaders including Advocate Jayachandran, Kovilanoor Manikandan, and Hindu Munnani Mangalampettai Perur Secretary Dharmaraj also participated.

To ensure law and order, Cuddalore District Superintendent of Police Jayakumar supervised security arrangements along with Additional SP Kotteeswaran. More than 600 police personnel, including 7 Deputy Superintendents, 3 Inspectors from Virudhachalam All Women Police, Mangalampettai, and Pennadam stations, 50 Sub-Inspectors, 100 Rapid Action Force members, 100 Home Guards, and 150 local police, were deployed on duty.

No comments

Thank you for your comments