காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
காஞ்சிபுரம், ஆக.31:
விநாயகர் சதுர்த்தி திருநாள் நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதாச்சலம் நகர், திருக்காலிமேடு,காந்தி சாலை உட்பட 20 இடங்களில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் சின்னக்காஞ்சிபுரம் ரங்காசமி குளம் பகுதிக்கு மினி லாரிகளில் கொண்டு வரப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை 35வது ஆண்டாக இந்து முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் ஞானவேல் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.ஊர்வலத்தில் தலைமை விநாயகராக இந்து முன்னணி விநாயகர் சிலை சென்றது.
தொடர்ந்து 20 விநாயகர் சிலைகளும் வரிசையாக காந்தி சாலை,காமராஜர் சாலை வழியாக பெரியகாஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம் பகுதிக்கு வந்ததும் ஊர்வலம் நிறைவு பெற்றது.பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது.
For English Reader :
Ganesh Idols Immersion Procession in Kanchipuram
Kanchipuram, Aug 31:
The Ganesh Chaturthi festival was celebrated nationwide on August 27. In Kanchipuram city, idols were installed at over 20 places including Vedachalam Nagar, Thirukkalimedu, and Gandhi Road, where special poojas and deeparathanai were performed. Police provided security at all the locations during the celebrations.
On Sunday, the idols were brought in mini lorries and lined up near Rangasamy Kulam in Chinna Kanchipuram. The Hindu Munnani, led by district vice-president Gnanavel and executive member Santhosh, made arrangements for the 35th consecutive year. The main idol of Hindu Munnani led the procession, followed by 20 Ganesh idols taken through Gandhi Road and Kamarajar Road, reaching the Gangai Kondaan Mandapam area in Periya Kanchipuram.
Later, all the idols were transported to Mamallapuram beach and immersed amid religious fervor.

No comments
Thank you for your comments