Breaking News

காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடக்கம்

காஞ்சிபுரம், ஆக.31:

தமிழ்நாடு மாநில வாணிபக்கழகமான டாஸ்மாக்கில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் காஞ்சிபுரம்(தெற்கு) மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 

             

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், டாஸ்மாக் லிட்., காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் சென்னை மண்டலம், காஞ்சிபுரம் (தெற்கு) மாவட்டத்தில் 01.09.2025 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


 

இதன்படி, வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மது பாட்டில்களை பொது வெளியில் வீசுவதை தவிர்த்து, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்ப பெறும் திட்டத்தின்படி மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10/- கூடுதலாக செலுத்தி, பாட்டில்களை பெற்று மது அருந்திவிட்டு காலி மது பாட்டில்களை திரும்ப அதே மதுபானக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10/-ஐ திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 


இதன்படி, காலி பாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை தடுப்பதே இதன் நோக்கமாகும்.


இதன்படி காலிமதுபாட்டில்களை பொது வெளியில் கண்ட இடங்களில் வீசுவதும், சுற்றுப்புறச் சூழல் மாசுபடாமல் தடுப்பதுமே இதன் நோக்கமாகும் என காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments