Breaking News

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூரில் புத்த பண்பாட்டு மையம் அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு

காஞ்சிபுரம், ஆக.24:

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில் புத்த பண்பாட்டு மையம் அமைக்க அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.



காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில் செட்டில்மென்ட் நிலங்கள் அனாதீனம் என தவறான வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கலாம் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு மற்றும் வருவாய்த்துறை ஆணையரின் பரிந்துரையின்படி 105 விவசாயிகளுக்கு பட்டா வழங்க காஞ்சிபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரால் விசாரணை செய்து பட்டா வழங்கிட மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்ரபான கோப்புகளை மாவட்ட நிர்வாகம்நில நிர்வாக ஆணையருக்கு பரிந்துரை செய்யும் நிலையிலும் உள்ளது.

இந்த நிலையில் எங்கள் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் விளைநிலங்களில் புத்த பண்பாட்டு மையம் அமைக்க ஆய்வு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்செய்தி எங்கள் கிராமத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.வாழ்வாதாரமும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே எங்கள் கிராமத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் புத்த பண்பாட்டு மையம் அமைக்கவோ, எங்கள் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தவோ வேண்டாம் என எங்களது எதிர்ப்பினை இக்கோரிக்கை மனு மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Thank you for your comments