தேவரியம்பாக்கத்தில் கிராம சபைக் கூட்டம்
காஞ்சிபுரம், ஆக.24:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் அவ்வூராட்சி மன்ற தலைவர் மா.த.அஜய்குமார் தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த நிதியாண்டுக்கான தரவுகளை பரிசீலித்து ஊராட்சியின் வளர்ச்சி குறித்த பல்வேறு நிலைகளை மதிப்பிடும் நோக்கில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.கிராம மக்களின் பங்களிப்புடன் பல்வேறு அரசுத்துறைகளின் பங்களிப்புகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.
வேளாண்மை,கால்நடை,சுகாதாரம், நுகர்வோர் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், காவல்துறை,நுகர்வோர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தரவுகள் குறித்தும் கலந்துரையாடல் செய்யப்பட்டது.
இச்சிறப்புக்கு காரணமான ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சிப்பிரிவு பயிற்றுநர் அரவிந்தன் ஆகியோருக்கு கூட்டத்தில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

No comments
Thank you for your comments