Breaking News

வேலூர் சரகத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் - டி.ஐ.ஜி. தர்மராஜன் உத்தரவு

வேலூர்: 

வேலூர் சரகத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து வேலூர் சரக டி.ஐ.ஜி. தர்மராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


வேலூர் சரகத்தில் மாற்றப்பட்ட காவல் ஆய்வளர்கள் விவரம் வருமாறு:- 

பள்ளிகொண்டா போலீஸ் ஆய்வாளராக ராமகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய சுப்பிரமணி வேலூர் தாலுகாவுக்கும், அங்கு பணியாற்றிய சுபா விரிஞ்சிபுரத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், வேலூர் தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், அங்கு பணியாற்றிய தமிழரசி, செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேலூர் தீவிரவாதத் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரஜினிகுமார், குடியாத்தம் கலால் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய சின்னதுரை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டராக பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய ருக்மாங்கதன் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டராகவும், குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி, திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, ராணிப்பேட்டை மாவட்டம் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய பாரதி அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய நாகேந்திரன் பாணாவரம் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். 

கலசபாக்கம் இன்ஸ்பெக்டராக கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய கார்த்திக் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு 2-க்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய இலக்குவன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை தூசி இன்ஸ்பெக்டராக ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய கோகுல்ராஜன், திருவண்ணாமலை கலால் பிரிவுக்கும், செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தக்கோலம் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். 

ஆரணி டவுன் இன்ஸ்பெக்டராக செந்தில் விநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய விநாயகமூர்த்தி சிப்காட் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளார்.

No comments

Thank you for your comments