கோயில் நிலத்தை மீட்டுத்தர காவனூர் புதுச்சேரி கிராம மக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம், ஆக.18:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகேயுள்ள காவனூர் புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷனை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனு விபரம்.
காவனூர் புதுச்சேரி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திலிருந்த முன்னோர்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்த கிராமத்தில் உள்ள இடத்தை ஒருவருக்கு வழங்கி குடியிருக்க அமர்த்தியிருக்கிறார்கள்.
அவர் அந்த இடத்தை இப்போது அவரது பெயருக்கு பட்டா மாற்றி வைத்துக்கொண்டு திருவிழா நடத்த அனுமதிப்பதில்லை.எனவே அவரது பட்டாவை ரத்து செய்து கோயில் இடத்தை மீண்டும் எங்களுக்கே மீட்டுக்கொடுத்து திருவிழா நடத்த அனுமதி பெற்றுத்தர வேண்டும் என அக்கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
Over 100 residents of Kavanur Puducheri village near Uthiramerur in Kanchipuram district submitted a petition during a public grievance meeting, seeking recovery of temple land allegedly under encroachment. They urged officials to cancel the patta issued to a private individual and restore the land for conducting the Mariamman temple festival.
No comments
Thank you for your comments