செவ்வாய் கிழமை (19-08-2025) ராசி பலன்கள்
மேஷம்
இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். உறவினர்களின்
எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும்.
தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் மனதில் குழப்பங்கள்
உண்டாகும். உத்தியோகத்தில் புதுவிதமான சூழல்கள் உருவாகும். உயர்வு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : வழக்குகள் சாதகமாகும்.
பரணி : விமர்சனங்கள் நீங்கும்.
கிருத்திகை : புதுமையான நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எடுத்துச் செல்லும்
உடைமைகளில் கவனம் வேண்டும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு
கிடைக்கும். சில அனுபவங்கள் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும்.
வியாபாரத்தில் வரவுகள் தேவைக்கு இருக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால்
மாற்றம் உண்டாகும். பாசம் வெளிப்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : உடைமைகளில் கவனம்
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
மிதுனம்
பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வுகள் காணப்படும். சில
விஷயங்களில் அனுபவம் வெளிப்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து
செயல்படவும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார
பணிகளில் பொறுமையை கையாள்வது நல்லது. எதிலும் திட்டமிட்டு செயல்பட்டால் காலதாமதம்
குறையும். மேன்மை நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : அனுபவம் வெளிப்படும்.
திருவாதிரை : வாதங்கள் நீங்கும்.
புனர்பூசம் : தாமதம் குறையும்.
கடகம்
நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வரவுக்கு மீறிய
செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான பலன்கள்
சாதகமாக அமையும். சுபகாரிய தடைகள் விலகும். பக்தி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : தடைகள் விலகும்.
சிம்மம்
நீண்ட நாட்களாக நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். உடல்
ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் லாபம்
உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சாதகமான
சூழல்கள் அமையும். மனதளவில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் பிறக்கும். சோதனை
நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூரம் : லாபகரமான நாள்.
உத்திரம் : புத்துணர்ச்சி பிறக்கும்.
கன்னி
அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வெளியூர்
பொருள்கள் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்ட காரமான வாய்ப்புகள்
அமையும். வாகன பழுதைகளை சீர் செய்வீர்கள். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள்
அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அன்பு வெளிப்படும்
நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உத்திரம் : ஆதாயகரமான நாள்.
அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை : பொறுப்புகள் கிடைக்கும்.
துலாம்
வியாபார ஒப்பந்தங்களில் இருந்த இழுபறிகள் மறையும். சில
அனுபவங்கள் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். இறைப்பணிகளில் ஆர்வம் உண்டாகும்.
உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும்.
ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்
சித்திரை : இழுபறிகள் மறையும்.
சுவாதி : மதிப்புகள் கிடைக்கும்.
விசாகம் : ஏற்ற இறக்கமான நாள்.
விருச்சிகம்
குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு
நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் மேம்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில்
கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சக வியாபாரிகளால்
புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகும்.
அலைச்சல் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : வேறுபாடுகள் நீங்கும்.
அனுஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
கேட்டை : அலைச்சல் உண்டாகும்.
தனுசு
நினைத்த காரியங்கள் சாதகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி
அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உருவாகும். உயர் பொறுப்பில்
இருப்போர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரப் போட்டிகள் சற்று குறையும்.
முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பணிகளில் இருந்த தடைகள் விலகும்.
விவேகம் வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திராடம் : தடைகள் விலகும்.
மகரம்
கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில்
லாபம் அதிகரிக்கும். சுப காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். பழைய கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.
சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் உயரும். முகத்தில் பொழிவுகள்
மேம்படும். பொறுமை வெளிப்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : லாபகரமான நாள்.
திருவோணம் : வருமானம் உயரும்.
அவிட்டம் : பொழிவுகள் மேம்படும்.
கும்பம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை
மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த எண்ணம் மேம்படும். வியாபார
பணிகளில் பொறுமை வேண்டும். கலை துறைகளில் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மனதில்
புதுவிதமான கனவுகள் பிறக்கும். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தடங்கல் மறையும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
அவிட்டம் : சேமிப்புகள் மேம்படும்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
இனம் புரியாத சில சிந்தனைகளால் சோர்வுகள் ஏற்படும்.
மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும்.
முடிவுகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. சாந்தம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : சோர்வான நாள்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
ரேவதி : பொறுமை வேண்டும்.
No comments
Thank you for your comments