காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான மாபெரும் ஜூனியர் தடகளப் போட்டி துவக்கம்
காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில், காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் 39வது ஆண்டு மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது.
இத்துவக்க விழாவினை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. சண்முகம், ஐ.பி.எஸ்., மற்றும் தடகள சங்கத் மாவட்ட தலைவர் பாஸ்கர் பாண்டியன், ஐ.ஏ.எஸ்., ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளைத் துவக்கி வைத்தனர்.
இந்த தடகளப் போட்டிகளில் 14, 16, 18 மற்றும் 20 வயது பிரிவு போட்டியாளர்களுக்காக நடத்தப்பட்டுள்ளன.
இந்த தடகள போட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் வண்டலூரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கச் செயலாளர் திரு. வளர்ச்செல்வன், தொழிலதிபர் கார்த்திகேயன், மாவட்ட தடகள சங்கத்தின் துணைத் தலைவர் வழக்கறிஞர் அரவிந்த்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments