Breaking News

வையாவூர் நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு

 காஞ்சிபுரம், ஆக. 7:

காஞ்சிபுரம் அருகே வையாவூர் நியாயவிலைக்கடையில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.



ஆட்சியர், கடையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரத்தைச் சரிபார்த்து, இருப்பு நிலையைப் பற்றி கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களையும் பரிசோதித்தார்.

தொடர்ந்து, கிழக்கு ராஜவீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்ட அவர், பதிவேட்டினை ஆய்வு செய்து, குழந்தைகளின் கற்றல் நிலை பற்றி கேட்டறிந்தார். 

அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் ஆய்வு செய்த அவர், சமையலர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளையும் வழங்கினார்.


Vaiaavur Ration Shop Anganwadi Inspection Kanchipuram 2025

No comments

Thank you for your comments