Breaking News

காஞ்சிபுரம் ஓரிக்கையில் கைத்தறி தின விழா – 7 புதிய தறிக்கூடங்கள் திறப்பு

 காஞ்சிபுரம், ஆக. 7:

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள சிறு கைத்தறி பூங்காவில், கைத்தறி தின விழாவையொட்டி வியாழக்கிழமை கூடுதலாக தறிக்கூடங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில், பட்டுச் சேலைகளுக்கான ஜரிகை உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. அதன் வளாகத்திலேயே அண்மையில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா தொடங்கப்பட்டது. இப்பூங்காவில் முதலில் 11 தறிக்கூடங்கள் அமைக்கப்பட்டு, தரமான காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.

கைத்தறி தினத்தை முன்னிட்டு, நெசவாளர்களை ஊக்குவிக்கும் விதமாக கேக் வெட்டி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறித்துறை துணை இயக்குநர் மணிமுத்து கேக்கினை வெட்டினார். நிகழ்வில் கைத்தறிப்பூங்கா அலுவலர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து துணை இயக்குநர் மணிமுத்து, “கைத்தறி தினத்தை முன்னிட்டு, இப்பூங்காவில் மேலும் 7 புதிய தறிக்கூடங்கள் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. தற்போது மொத்தம் 18 தறிக்கூடங்களில் தரமான காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்து வருகிறோம். இந்த பூங்கா மூலம் 34 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.


Kanchipuram Orikkai Handloom Day 7 New Looms 2025

No comments

Thank you for your comments