காஞ்சிபுரத்தில் மு. கருணாநிதி 7வது நினைவு தினம் அமைதிப்பேரணி மற்றும் மரியாதை நிகழ்வு
காஞ்சிபுரம், ஆக. 7:
மு. கருணாநிதி, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் நினைவு நாளை ஒட்டி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உத்தரமேரூர் எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளர் க. சுந்தர் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பெரியார் நினைவுத்தூண் பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி, ரங்கசாமி குளம் வழியாக தி. கே. நம்பி தெருவிலுள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் நிறைவுற்றது.
பேரணி நிறைவுக்கு பின், பவளவிழா மாளிகை முன்பாக அமைந்துள்ள அண்ணா மற்றும் கலைஞர் உருவச் சிலைகளுக்கு கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரணியில் பங்கேற்ற பலரும் கருப்பு நிற சட்டை அணிந்திருந்தனர்.
Karunanidhi 7th Memorial Day Rally Kanchipuram 2025
No comments
Thank you for your comments