Breaking News

உத்தரமேரூரில் கறவைப்பசுக்களுக்கு 50% மானியத்துடன் ஊட்டச்சத்து – புதிய அரசு திட்டம்

காஞ்சிபுரம், ஆக.1:

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கறவைப் பசுக்களுக்கு 50 சதவிகித மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் செயல்படுத்தப்பட இருப்பதாக ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

கறவைப்பசுக்களுக்கு 50 சதவிகித மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளது.இத்திட்டத்தின் கீழ் உத்தரமேரூர் ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு ஊராட்சிக்கு 100 ஊரக கால்நடை விவசாயிகள், சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50 சதவிகித மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் பால்வளத்தை மேம்படுத்துவதற்காக அமுல்படுத்தப்படவுள்ளது.இத்திட்டத்தின் கீழ் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவைப் பசுக்கள் தேர்வு செய்யப்படும்.ஒரு கறவைப்பசுவிற்கு நாள் ஒன்றுக்கு 3 கிலோ ஊட்டச்சத்துக்கள் வீதம் 4 மாதங்களுக்கு 360 கிலோ வழங்கப்படும்.

மேலும் ஒரு மாதத்திற்கு தாது உப்புக்கலவை வீதம் 4 மாதங்களுக்கு 4 கிலோ ரூ.50 வீதம் மானியத்தில் வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர் தமிழ்நாடு பால் உற்பத்தியாலர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஊனமுற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் பயனாளிகள் உள்ளூர் கால்நடை மருந்தகம் அல்லது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தினை அணுகி விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் எனவும் இத்திட்டம் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டுமே செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் விபரங்களுக்கு உதவி இயக்குநர்,கால்நடை பராமரிப்புத்துறை, காஞ்சிபுரம் மற்றும் மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, காஞ்சிபுரம்ஆகிய அலுவலர்களை நேரடியாக அணுகி பயன்பெறலாம் எனவும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subsidized Cattle Feed Scheme in Uthiramerur – 2025 Tamil Nadu Government



No comments

Thank you for your comments