Breaking News

தாமல், திம்மசமுத்திரம் கிராமங்களில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்: அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு - நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 காஞ்சிபுரம்,  ஜூலை 31:

தாமல், திம்மசமுத்திரம் கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் ஆய்வு செய்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



தாமல் கிராம சமூகக் கூடத்தில் மற்றும் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையிலும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, சார் ஆட்சியர் ஆஷிக் அலி முன்னிலையிலும் நடைபெற்றன.

முகாமின் ஒரு பகுதியாக, இலவச மருத்துவ முகாம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெறும் செயல், மற்றும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் நிகழ்வுகள் நடைபெற்றன. பெற்ற மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

19 பயனாளிகளுக்கு வகுப்பு சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், முதல் நிலை பட்டதாரி சான்றிதழ்கள், மற்றும் குடும்ப அட்டைகள் ஆகியனவற்றை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.


அமைச்சரின் சொந்த நிதியில் மேம்படுத்தப்பட்ட பள்ளி வசதி  

தாமல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வழிபாட்டு திடல் அமைக்க வேண்டும் என்ற பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் ஆர்.காந்தி தனது சொந்த நிதியில் ரூ.19.80 லட்சம் செலவில் மேம்படுத்திய மேற்கூரை அமைக்கப்பட்ட வழிபாட்டு திடலை திறந்து வைத்தார்.




No comments

Thank you for your comments