மாணவர் நலனுக்கான பல்வேறு திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நீதிபதி கலையரசன் வேண்டுகோள்
காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் ஊவேரி பகுதியில் பி.டி. செங்கல்வராய அறக்கட்டளை சார்பில் இயங்கி வருகிறது செங்கல்வராய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.
இக்கல்லூரில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நிறைவு பெற்று இன்று முதல் நாள் வகுப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற கலையரசன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள திரு செங்கல்வராய நாயக்கர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நீதிபதி மற்றும் பி. டி. லி. செங்கல்வராயன் அறக்கட்டளையின் தலைவர் கலையரசன், அந்த காலத்திலேயே இளைஞர்களின் கல்விக்காக பல்வேறு அறக்கட்டளைகளை நிறுவி பல ஆயிரம் கோடி சொத்துக்களை அதற்கு அளித்து கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
தற்போது கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை தவிர்த்து நான்காண்டுகளாக தற்போதைய நிர்வாக குழு திறமையாக செயல்பட்டு கல்லூரியினை முதன்மை இடத்திற்கு அழைத்து வந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் முன்னால் மாவட்ட ஆட்சியர் திரு வி.சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட நீதிபதி திரு.எஸ்.சாத்த பிள்ளை, மருத்துவர் ஆர்.கண்ணையன், திருமதி எஸ்.ரேணுகா, பொறியாளர் எச்.வெங்கடேஷ், முனைவர் பி.அரிஸ்டாட்டில், திரு எம்.ராஜேந்திரன் மற்றும் திரு. எம்.என்.விஜயசுந்தரம் ஆகியோரின் சிறப்பான ஒத்துழைப்பினாலும் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றது.


No comments
Thank you for your comments