Breaking News

பெருநகர் அரசுப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி


காஞ்சிபுரம், ஆக.10:

காஞ்சிபுரம் அருகே பெருநகரில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகர் மற்றும் ஆர்ப்பாக்கம் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. 

இரு பள்ளிகளிலும் தனித்தனியாக மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பரிவின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட ஒவியப்போட்டியில் இரு பள்ளிகளையும் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெருநகர் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர்ஆறுமுகம் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாக்கம் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலர்கள் தவமணி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சார்பு ஆய்வாளர் ஹரிதாஸ் கலந்து கொண்டு ஓவியப்போட்டியில் முதல் 3 இடங்களை வென்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை பரிசாக வழங்கினார்.

இதனையடுத்து போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் போதைப்பொருள் ஏற்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாவட்ட அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் விரிவாக விளக்கிக் கூறினார்கள்.

No comments

Thank you for your comments