
தருமபுரி , ஆக.10:
தலித் கிறிஸ்தவர்கள் சமூக நீதியைப் பெறுவதில் ஒன்றிய அரசு தடையாய் இருப்பதாக தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் டயஸ் குற்றம்சாட்டினார். தலித் கிறிஸ்தவர்களை SC பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்தை ஒன்றிய அரசு நிராகரித்ததை கண்டித்து, அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு தலைவர் மற்றும் ஆயர் லாரன்ஸ் டயஸ் தலைமையில் சமூக நீதிக்கான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், மத அடிப்படையில் தலித் கிறிஸ்தவர்களுக்கு SC அந்தஸ்து மறுக்கும் 1950ம் ஆண்டு ஜனாதிபதி ஆணை எண் 3 நீக்கம், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரைப்படி தலித் கிறிஸ்தவர்களை SC பட்டியலில் சேர்த்தல், கடந்த 75 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை திருப்பித் தருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் தருமபுரி மறை மாவட்ட பொருளாளர் இசையாஸ், பங்கு தந்தைகள் மோசஸ், அலங்காரம், ராஜா, ஜான் மைக்கேல், ஜேம்ஸ், கருத்தாளர் சுமதி, சாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜேசு சபை சமூக சேவை மைய பொறுப்பாளர் யூஜின் முத்து கண்டன உரையாற்றினார்.
Protest in Dharmapuri demanding SC status for Dalit Christians
No comments
Thank you for your comments