ஆக.,21, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் வருகை, முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் பேச்சு
காஞ்சிபுரம், ஆக.10:
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அதன் மாவட்ட செயலாளர் கே.யு.சோமசுந்தரம் ஏற்பாட்டில் திமுக அரசின் அவலங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
கட்சியின் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் இணைந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், எம்ஜிஆர்.இளைஞர் அணியின் செயலாளர் எஸ்எஸ்ஆர்.சத்யா, அனைத்துலக எம்ஜிஆர்.மன்ற இணைச் செயலாளர் காஞ்சி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசுகையில்
இம்மாதம் 21 ஆம் தேதி கழக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும்,சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் பரப்புரை நிகழ்த்திட வருகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக பல்வேறுஆலோசனைகளையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம்,மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மணிவண்ணன்,மாவட்ட எம்ஜிஆர்.மன்ற செயலாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments