Breaking News

கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் மாநகராட்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, புரட்சி பாரதம் கட்சி சார்பில், நெல்லையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் சாதிய ஆணவப் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



சமீபத்தில் கவின், காதல் தொடர்பான விவகாரத்தில் சாதிய ஆணவத்தால் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, புரட்சி பாரதம் கட்சி மாவட்டத் தலைவர் எஸ்.பி.சி. தனசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சாதிய வன்மத்தையும் ஆணவப் படுகொலையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிகழ்வில், முன்னிலை நகர செயலாளர் குட்டி (சத்தியசீலன்), பவளரசன், விஷால் பிரபு, ஆர்.கே. ரமேஷ், வழக்கறிஞர் பாரதிதாசன், மோகன் காந்தி, வழக்கறிஞர் தரணி, சந்திரன், ஆரோக்கிய ராஜ், அன்னக்கிளி, ராயப்பன், செல்வம், பாலு, அறிவழகன், தீனா, ராமு, ராவ், வெங்கடேசன், கதிர்வேல், விவேக், ரவேந்திரன், விமல் ராஜ், முருகன், கலையரசன், விக்னேஷ்வரன், ஆதி, பெரியார் தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments