காஞ்சிபுரத்தில் நியாயவிலை கடை மற்றும் விருந்தினர் மாளிகை கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்
காஞ்சிபுரம் மாநகராட்சி 11வது வார்டு பிள்ளையார்பாளையம் திருவேங்கம்மன் தெரு பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடை 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்த நிலையில் நியாயவிலைக் கடை பழுதடைந்த காரணத்தினால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள நியாயவிலைக் கடைக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை கூடுதல் கட்டிடம் பொதுப்பணித்துறை நிதியில் இருந்து ரூபாய் 2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடப் பணியினை சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்து கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் எஸ். சந்துரு, செவிலிமேடு எஸ். மோகன், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி பொறியாளர் கணேசன், பகுதி செயலாளர்கள் திலகர், தசரதன், வெங்கடேசன், மாநகர துணை செயலாளர்கள் ஏ எஸ் முத்துசெல்வம், வ. ஜெகன்நாதன், மாமன்ற உறுப்பினர்கள் சண்முகானந்தம், தேவராஜ், விஸ்வநாதன், சங்கர், சரஸ்வதி பாலமுருகன் மற்றும் மாநகர திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



No comments
Thank you for your comments