Breaking News

காஞ்சிபுரம் பட்டு பூங்காவை பார்வையிட்ட 14 நாடுகளின் அயலகத் தமிழர்கள்

 காஞ்சிபுரம், ஆக.14:

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், கனடா, மலேசியா, மொரிசியஸ், மியான்மர், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 95 அயலகத் தமிழர்கள் காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்ப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பட்டுப் பூங்காவை பார்வையிட்டனர்.



20 ஆண்கள், 75 பெண்கள் என மொத்தம் 95 பேர் கொண்ட குழுவினர், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரிகத்தை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் தமிழகம் வந்துள்ளனர். தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பின் தற்போது காஞ்சிபுரம் வந்துள்ளனர்.

பல தலைமுறைகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த தமிழர்கள், இப்போது தமிழகத்தில் உள்ள தங்கள் ரத்த சொந்தங்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் பட்டு பூங்கா வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில், மாவட்ட அதிகாரிகள் காஞ்சிபுரத்தின் சிறப்புகளை அயலகத் தமிழர்களுக்கு விரிவாக விளக்கினர்.


A group of 95 overseas Tamils from 14 countries, including Canada, Malaysia, Mauritius, Myanmar, and Sri Lanka, visited the Kanchipuram Silk Park to explore Tamil culture.



No comments

Thank you for your comments