Breaking News

வாசன் மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவை துவக்கம்..!

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள வாஸன் கண் மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவை துவக்கம்.



இதைப் பற்றி செய்தியாளர்களிடம் சீனியர் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அனுஷா வெங்கட்ராமன் கூறுகையில் வாஸன் கண் மருத்துவமனை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கோவை மாவட்டம் முழுவதும் எங்களது கிளைகள் மற்றும் சிறப்பு கண் பரிசோதனை முகாம் மூலம் அனுமதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்கு சிறப்பானதொரு சலுகைகள் வழங்கி வந்தோம். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை சேவையை துவங்கி உள்ளோம் எனவே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் கண்பார்வை இழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டு பயன்பெறுமாறு இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கண்விழித்திரை நோய், கண்ணில் கூம்பு வடிவ கருவிழி ,குழந்தைகளுக்கான கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் கண் நீர் அழுத்த நோய் உள்ளிட்ட நோய்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.அதனைத்தொடர்ந்து கோவை சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள எங்களது கிளைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான திட்டத்தின் கீழ் இந்த சேவையை வழங்கி வருகிறோம். மேலும் எங்களது அனைத்து கிளைகளிலும் பொது மக்களின் வசதிக்காக பிரத்தியேகமாக அரசு தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மருத்துவர் ஜெக ஜனணி, செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments