காஞ்சிபுரத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தொடக்கம்
காஞ்சிபுரம், ஆக.14:
இந்த நீதிமன்றத்தை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவத்சவா சென்னையிலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். சௌந்தர் மற்றும் கே. குமரேஷ்பாபு ஆகியோரும் இணைந்து கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு தீர்ப்பாயத்தின் மாவட்ட நீதிபதியாக டி. ஜெயஸ்ரீ பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ப.உ. செம்மல் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே. சண்முகம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மேயர் எம். மகாலட்சுமி யுவராஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். மோகனகுமாரி, தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா, தலைமை குற்றவியல் நீதிபதி எஸ். மோகனாம்பாள், சார்பு நீதிபதி கே.எஸ். அருண் சபாபதி, கூடுதல் சார்பு நீதிபதி எஸ். திருமால், அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன், மூத்த வழக்குரைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
A special district court for motor accident claim cases was inaugurated in Kanchipuram by Madras High Court Chief Justice Manindra Mohan Shrivastava via video conference.




No comments
Thank you for your comments