காஞ்சிபுரம் :
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுகவினர் அமைதி பேரணி, சிலைக்கு மரியாதை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
In Kanchipuram, DMK members paid tribute to former Tamil Nadu CM Kalaignar M. Karunanidhi on his 7th death anniversary by creating a 7-foot floral portrait using 100 kg of flowers, followed by annadhanam for over 500 people, with senior leaders in attendance.
அந்த வகையில், காஞ்சிபுரம் பெரிய காஞ்சிபுரம் பகுதியில், திமுக செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு துணைப் பெருந்தலைவர் நித்யா சுகுமார் ஏற்பாட்டில், 100 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான பூக்களைப் பயன்படுத்தி, 7 அடி உயரத்தில் கலைஞர் மு. கருணாநிதியின் உருவத்தை அலங்கரித்து நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர், திமுக கொள்கை பரப்பு செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும், மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் கே. ஆறுமுகம், மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், பகுதி செயலாளர்கள் திலகர், சந்துரு, தசரதன், வெங்கடேசன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் யுவராஜ் மற்றும் பல மாவட்ட, மாநகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments