Breaking News

காஞ்சிபுரம் கூட்டுறவு அச்சகத்தில் மத்திய கூட்டுறவுத்துறை அதிகாரி ஆய்வு

காஞ்சிபுரம், ஆக.8:

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு அச்சகம் உட்பட பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் மத்திய அரசின் கூட்டுறவுத்துறை இணைச் செயலாளர் ஸ்ரீராமன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.


மத்திய அரசின் கூட்டுறவுத்துறை இணைச் செயலாளராக இருந்து வரும் ஸ்ரீராமன் காஞ்சிபுரம் வந்திருந்தார். அவர் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களான கூட்டுறவு அச்சகம்,முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி,மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஆகியனவற்றில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அவற்றின் செயல்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீயிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.இந்நிகழ்வின் போது கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments