கலைஞர் கருணாநிதி 7ஆம் ஆண்டு நினைவு நாளில் காஞ்சிபுரத்தில் 500 பேருக்கு அன்னதானம்
அந்த வகையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் மாநில திமுக வர்த்தக அணி துணைச் செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மாநகர திமுக செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், பங்கேற்று பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கி கலைஞரின் நினைவு தினத்தை அனுசரித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 18 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் திலகர், வட்டச் செயலாளர் சம்பத், வழக்கறிஞர் ஈ எல் கண்ணன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments